முதுவர். இரணியன் நா.கு.பொன்னுசாமி அய்யா அவர்கள், பணிநிறைவு பெற்ற உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர். உயர்கலையியல் முதுவர் (Advanced Master of Arts), கல்வியியல் முதுவர் (Master of Education), மலையாளச் சான்றிதழ் (Certificate in Malayalam) பெற்றவர். அகவை 70 கடந்தும் தமிழ்த் தொண்டு செய்து வருபவர்.
தமிழின் பல்வேறு ஏடுகளில் - தென்மொழி, தமிழம், பூஞ்சோலை, எழுகதிர், தீர்த்தக்கரை, வீரவேங்கை, விடுதலைப் புலிகள், குமரன், அன்னம் விடு தூது, உண்மை , சிந்தனையாளன், தமிழர் கண்ணோட்டம், காக்கைச் சிறகினிலே, சமூக நீதித் தமிழ்த்தேசம், வசந்தம், தினமணி – கருத்துப் பகிர்வும் செய்து வருபவர்.
பல தமிழ் நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளார். அவற்றுள் சில: கோவை வானொலி - நாள் ஓர் அறிஞர் சான்றோர் சிந்தனை - இலக்கியச் சோலை, பாரதியார் பல்கலைக்கழகம்: தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி நூற்றாண்டு விழாச் சொற்பொழிவு, தமிழ்நாடு இலக்கியப் பேரவை, சிந்தனைப் பேரவை, பகுத்தறிவாளர் கழகம், இலக்கிய ஆய்வரங்கம், களம் இலக்கிய அமைப்பு, திருவள்ளுவர் பேரவை, பாவேந்தர் பேரவை முதலியன.
இரணியன் எழுதியுள்ள நூல்கள்: 1. தேசிய இன விடுதலையும் சிறுபான்மையினர் உரிமையும், 2. தமிழ்ப் பாட்டாளியரின் உயிர்ப்பு, 3. புலரும் (கவிதை நூல்), 4. காற்றும் துடுப்பும் (கவிதை நூல்), 5. சங்க இலக்கியத்தில் சமூக அறம், 6. தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம்.
இரணியன் அய்யா பெற்றுள்ள விருதுகள்: 1. கோவை மாவட்டத் தமிழ்ப் பேரவை வழங்கிய “நற்றதமிழ் நம்பி” விருது (2007), 2. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 39ஆம் பன்னாட்டுத் தமிழியல் கருத்தரங்கம், தமிழ்ச் சான்றோர் விருது (2008) 3. கோவை சி ஆர் இராம கிருஷ்ணம நாயுடு - ருக்மணியம்மாள் கல்வி அறக்கட்டளை, தமிழறிஞர் விருது (2012-2013).