தமிழில்

தமிழில் காண

NEWS & ANNOUNCEMENTS

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாகத் திராவிடப்பொழில் ஜூலை -செப்டம்பர் 2023 11வது இதழுக்கான ஆய்வுக் கூட்டம் நவம்பர் 18,2023 சனிக்கிழமை அமெரிக்கக் கிழக்கு நேரம் காலை 9 மணி, தமிழ்நாட்டின் நேரம் இரவு 8.30 மணிக்கு இணைய வழியாக நடைபெற்றது. நிகழ்வின் நெறியாள்கையாளராகப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் ,அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் இருந்து நிகழ்வை வழி நடத்தினார்கள். தன்னுடைய தொடக்க உரையில் ‘திராவிடப் பொழில் ‘இதழின் சிறப்புகளைக் குறிப்பிட்டு இந்தக் காலாண்டு திராவிடப்பொழில் இதழில் 5 கட்டுரைகள் வந்துள்ளன .அதில் பேரா.வீ.அரசு அவர்களின் ‘தமிழிச்சூழல் : சமூகநீதி-வ.உ.சி.’ என்னும் கட்டுரையும் எழுத்தாளர் ஞான.வள்ளுவன் அவர்களின் ,’பிற்காலச்சோழர்களின் செப்பேடுகளும்,பார்ப்பனர்களுக்கான தானங்களும் ‘ என்னும் கட்டுரையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.முதலில் பேரா.வீ.அரசு அவர்களின் கட்டுரையை முனைவர் த.கு.திவாகரன் அவர்கள் ஆய்வு செய்கிறார்கள் எனக்குறிப்பிட்டார். பின்பு முனைவர் த.கு.திவாகரன் அவர்களைச் சிறப்பாக அவைக்கு அறிமுகப்படுத்தி அவரைப் பேச அழைத்தார். [ Read More ]

பெரியார் பன்னாடு அமைப்பு ,அமெரிக்கா சார்பாக திராவிடப்பொழில் 10வது இதழின் ஆய்வுக் கூட்டம் இணைய வழி சூம் மூலமாக 24.06.2023 மாலை 7.30 மணி இந்திய நேரப்படி நடந்தது. “உலகம் முழுவதும் உள்ள திராவிட பற்றாளர்களே,பல்துறை வல்லுநர்களே,ஆளுமைகளே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.இன்று நாம் திராவிடப் பொழில் இதழ் ஆய்வு நடத்துகின்றோம்.திராவிடப்பொழில் இதழ் நம் பண்பாட்டை,சிறப்புகளை எடுத்துரைக்க தமிழிலும் ஆங்கிலத்திலும் மூன்று மாதத்திற்கொருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.இதுவரை 10 இதழ்கள் வந்துள்ளன. [ Read More ]

பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பாக திராவிடப்பொழில் இதழ்(அக்டோபர்- டிசம்பர் 2022) ஆய்வுக் கூட்டம் இணைய வழியாக சனவரி 21,2023 அமெரிக்க கிழக்கு நேரம் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.திராவிடப்பொழில் இதழ் ஆசிரியரும்,பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் தலைவருமான மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றும், நிகழ்வு குறித்தும் தொடக்க உரை ஆற்றினார். [ Read More ]

திராவிடப் பொழில் சூலை-செப்டம்பர் 2022 இதழின் ஆய்வுக் கூட்டம் பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் சார்பாக அக்டோபர் 22 2022 சனிக்கிழமை இரவு 8:00 மணிக்கு (தமிழ்நாடு நேரம்) நடைபெற்றது. நிகழ்வுக்கு அமெரிக்காவில் வசிக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சார்ந்த தோழர் மோகன் வைரக்கண்ணு அவர்கள் தலைமை ஏற்று அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். [ Read More ]

பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பாகத் திராவிடப்பொழில் 6-வது இதழ் (ஏப்ரல் 2022 - சூன் 2022) ஆய்வுக்கூட்டம் சூன் 11, 2022 சனிக்கிழமை, தமிழ்நாட்டு நேரம் இரவு 7.30 மணிக்கு இணைய வழிக்கூட்டமாக நடைபெற்றது. பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தொடக்க உரையை ஆற்றி, ஆய்வுக்கூட்டத்தின் நோக்கத்தைக் கூறித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்து .அனைவரையும் வாழ்த்தி வரவேற்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திச் செல்ல அனைவரின் சார்பிலும் சுதாகர் அவர்களை அழைத்தார். [ Read More ]

பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பாக, திராவிடப் பொழில் இதழ் ஆய்வு, இணைய வழிக் கூட்டம் ஏப்ரல் 09, 2022 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு (அமெரிக்க கிழக்கு நேரம் காலை 10 மணி) நடைபெற்றது. இந்த இணைய வழிக் கூட்டத்திற்கு, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர், திராவிடப் பொழில் இதழின் ஆசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். [ Read More ]

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வெளியீடாக மலரும் ’திராவிடப் பொழில்’ – காலாண்டு ஆய்விதழின், முதலாம் இதழ், தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளுமான தைப் பொங்கல் நாளையொட்டி, 2021 சனவரி 16 அன்று வெளியிடப் பெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேரா. முனைவர். வேதகிரி சண்முகசுந்தரம், ஆய்விதழினை வெளியிட்டுக் கருத்துரை வழங்கினார். [ Read More ]

Dravida Pozhil (Journal of Dravidian Studies) offers its humble respects to the memory of the renowned late scholar - Prof. Dr. T. Paramasivan, who passed away a few weeks back (Dec 24, 2020).Prof. Dr. T. Paramasivan (fondly called Tho. Pa) was a distinguished Scholar in Dravidian Studies and Tamil, Anthropologist, Historian and Academician. His unbiased approach in literary criticism coupled with data based analysis of Dravidian Culture and Social Anthropology has endeared him to one and all. [ Read More ]