தமிழில்
Volume 04, Issue 03 | July 2024 - September 2024
Neru, V. 2024. “Ariviyal Manappaanmaiyum India Ondriyamum”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 4 (3): 89-100.
கடந்த 100 ஆண்டுகளில் அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பும் அறிவியல் வளர்ச்சியும் பெரும் பாய்ச்சலைக் கண்டிருக்கிறது. அதுவும் கடந்த 30-40 ஆண்டுகளில் ஏற்பட்ட கணினி, இணைய வளர்ச்சி ஒரு புது உலகத்தை மனிதர்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு இனி உலகத்தை ஆளப்போகிறது என்று சொல்லுமளவிற்கு ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில் நுட்பம் கோலோச்சுகிறது. ஆனால் இவ்வளவு மகத்தான அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்த பின்பும், எல்லா மனிதர்களுக்கும் எல்லாமும் கிடைத்திருக்கிறதா? சமத்துவ உலகம் அமையும் என்னும் எண்ணம் தோன்றக் கூடிய வகையில் நிகழ்வுகள் நடைபெறுகின்றனவா? மனிதர்களுக்கு அறிவியல் மனப்பானமை வளர்ந்திருக்கிறதா? என்னும் கேள்விகள் எழுகின்றன. இவற்றைப் பற்றி ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
முனைவர். வா. நேரு
முனைவர். நேரு, தமிழகப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ஆவார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறையில், ‘இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். பெரியார் பட்டயச் சான்றிதழும் பெற்றவர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவர், தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் சாப்டூரில் பிறந்தவர். இவர், 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்', 'சூரியக்கீற்றுகள்', ‘சொற்களின் கூடுகளுக்குள்’ எனும் கவிதைத் தொகுப்புகளும், 'நெருப்பினுள் துஞ்சல்' எனும் சிறுகதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘சங்கப்பலகை’ எனும் நூல் மதிப்புரைகளின் தொகுப்புநூலும் வெளிவந்துள்ளது.
இவரின் ஆய்வேடு, நூலாக்கம் செய்யப்பட்டு, 'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும்' என்னும் நூலாகச் சில நாட்களுக்கு முன் அச்சாக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
‘திருக்குறள் வலியுறுத்தும் உயிர்ச்சூழலும் இன்றைய உலகச்சூழலும்', 'கடவுளையும் சடங்குகளையும் வள்ளுவம் புறக்கணிக்கிறது', 'தமிழ்த் துறவிகளும் வள்ளுவர் கூறும் தவமும்', 'ஆரிய எதிர்ப்புக்கு முன்னுரை-திருக்குறளின் பாயிரம்', 'செல்வமும் குடிமையும்', 'ஊழும் கூழும் – பகுத்தறிவுப் பார்வை' போன்ற தலைப்புகளில் இவரின் கட்டுரைகள் திருக்குறள் ஆய்வுத் தொகுப்புகளில் வெளிவந்துள்ளன. உலக/இந்திய மாநாடுகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் அளித்தவர். பல்வேறு இலக்கிய இதழ்களிலும், சமூக இதழ்களிலும், இணையத்திலும் பரவலாக எழுதி வருபவர்..
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch