தமிழில்
Volume 04, Issue 01 | January 2024 - March 2024
Neru, V. 2024. "Suyamariyathai Thirumanangal – Samoogamum Sattamum”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 4 (1): 65-75.
சுயமரியாதைத் திருமணங்கள் பற்றிய அறிமுகத்தை இந்தக் கட்டுரை கொடுக்கிறது. தமிழர்கள் மற்றும் ஆரியர்களின் வெவ்வேறான திருமண முறைகளைப் பேசுகிறது. சுயமரியாதைத் திருமணங்களின் நோக்கம் எது என்பதை ஆராய்கிறது. 4-5 தலைமுறைகளாகச் சுயமரியாதைத் திருமணங்களை மட்டுமே நடத்துகின்ற குடும்பங்கள் தமிழ்நாட்டில் பெருகியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சமூகம் மற்றும் சட்டத்தின் எதிர்ப்புகளைச் சுட்டிக் காட்டி, அந்த எதிர்ப்புகளையெல்லாம் வென்று, இன்று சுயமரியாதைத் திருமணங்கள் வெற்றிகரமாக நடைபெறுவதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
முனைவர். வா. நேரு
முனைவர். நேரு, தமிழகப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ஆவார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறையில், ‘இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். பெரியார் பட்டயச் சான்றிதழும் பெற்றவர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவர், தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் சாப்டூரில் பிறந்தவர். இவர், 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்', 'சூரியக்கீற்றுகள்', ‘சொற்களின் கூடுகளுக்குள்’ எனும் கவிதைத் தொகுப்புகளும், 'நெருப்பினுள் துஞ்சல்' எனும் சிறுகதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘சங்கப்பலகை’ எனும் நூல் மதிப்புரைகளின் தொகுப்புநூலும் வெளிவந்துள்ளது.
இவரின் ஆய்வேடு, நூலாக்கம் செய்யப்பட்டு, 'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும்' என்னும் நூலாகச் சில நாட்களுக்கு முன் அச்சாக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
‘திருக்குறள் வலியுறுத்தும் உயிர்ச்சூழலும் இன்றைய உலகச்சூழலும்', 'கடவுளையும் சடங்குகளையும் வள்ளுவம் புறக்கணிக்கிறது', 'தமிழ்த் துறவிகளும் வள்ளுவர் கூறும் தவமும்', 'ஆரிய எதிர்ப்புக்கு முன்னுரை-திருக்குறளின் பாயிரம்', 'செல்வமும் குடிமையும்', 'ஊழும் கூழும் – பகுத்தறிவுப் பார்வை' போன்ற தலைப்புகளில் இவரின் கட்டுரைகள் திருக்குறள் ஆய்வுத் தொகுப்புகளில் வெளிவந்துள்ளன. உலக/இந்திய மாநாடுகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் அளித்தவர். பல்வேறு இலக்கிய இதழ்களிலும், சமூக இதழ்களிலும், இணையத்திலும் பரவலாக எழுதி வருபவர்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch