தமிழில்
Volume 05, Issue 04 | October 2025 - December 2025
இன்று உலகமெங்கும் வாழ்கின்ற தமிழரின் அடையாளமாகக் கருதப்படுவது திருக்குறள். திருக்குறள் என்ற இலக்கியப்பிரதியின் பின்னர் பொதிந்திருக்கிற அரசியலையும் அதன் காரணமாகவே திராவிட இயக்கத்தினர் கடந்து நூறாண்டுகளுக்கும் மேலாக திருக்குறளைப் பரப்பும் பணியை மேற்கொண்டதையும் அதில் குறிப்பாகப் பெரியாரின் பங்களிப்பையும் இந்தக் கட்டுரை விவரிக்கிறது. திருக்குறளை ஒரு புனித நூலாகக் கருதாமல் வாழ்வியல் இலக்கியமாகக் கருதிய பெரியார் எப்படித் திருக்குறளின் சில கருத்துகளை கட்டுடைக்கிறார் என்பதையும் சுவைபட விளக்குகிறது.
எழுத்தாளர் ந. முருகேசபாண்டியன்
ந. முருகேசபாண்டியன் (1957) மதுரை மாநகரில் பிறந்த ந. முருகேசபாண்டியன் இளமைக் காலத்தில் சமயநல்லூர் கிராமத்தில் வசித்தார். பள்ளிச் சிறுவனாக இருந்தபோது புத்தகம் வாசிப்பதில் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம், பதின்பருவத்தில் தீவிர இலக்கியம் சார்ந்து மாறியது. தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் நூலகம் தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுக் கல்லூரி நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் கடந்த முப்பதாண்டுகளுக்கும் கூடுதலாக இலக்கிய விமர்சனத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். இவர் திறனாய்வாளர், கவிஞர், புனைவெழுத்தாளர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் பண்பாட்டாய்வாளர் எனப் பல்வேறு பரிமாணங்கள் மிக்கவர். சமகாலத் தமிழர்களின் சமூகம், அரசியல், பண்பாட்டுப் பிரச்சினைகளை விவாதிக்கும் கட்டுரைகளைச் சமூக அக்கறையுடன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றார்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch