தமிழில்
Volume 1, Issue 3 | July 2021 - September 2021
So.Na, Kandasamy 2021. “Ulagaayathamum Periyaariyamum”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 1 (3): 41 - 63
இந்தியச் சிந்தனை வரலாற்றில் உலகாயதம் தொன்மை மிக்கது. மக்கள் வாழ்வியலின் தொடக்க காலத்தில் தோன்றியது. மனிதனின் உணர்வுத் தேவைகளை நிறைவு செய்வது. தத்துவங்களின் அடித்தளமாகத் திகழ்வது. காலந்தோறும் எழுந்த மாற்றுச் சிந்தனையாளரின் மறுப்புக்கு ஆளானது. உலகாயதச் சிந்தனை பண்பாடும் நாகரிகமும் பரவுதற்கு முன்பே, உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த மாந்தர்களால் வளர்க்கப் பெற்றது. உலக நாட்டம் கொண்டது உலகாயதம். விண்ணக நாட்டம் கொண்டது வைதீக மார்க்கம். பகைமை உணர்வாளராலும் வளர் சிந்தனையாளராலும் உலகாயதம் குட்டுப்பட்டு வந்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் உலகாயதத்தினை வளர்த்த உரத்த சிந்தனையாளர், 'பகுத்தறிவுப் பகலவன்' எனப் பாராட்டப்படும் பெரியார் ஈவெரா. ஆவார் (கி.பி.17.09.1879 - 24.12.1973). தமிழ் மக்களின் சுயமரியாதைக்கும், தன்மான உணர்வுக்கும், வாழ்வியல் மறுமலர்ச்சிக்கும், சமத்துவ மேம்பாட்டிற்கும், உரிமை மீட்புக்கும், பெருந் தளபதியாகவும் போராளியாகவும் ஒளிவீசியவர் பெரியார் ஆவார்.
தமிழ்க்கடல் மறைமலை அடிகளின் மகளார் நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் (13.11.1938) ”பெரியார் என்ற பெயரினால் தமிழினத்தின் தனிப்பெரும் தலைவரும் புரட்சியாளருமாகிய ஈவெராவை அழைக்க வேண்டும்” என்ற முடிவு எடுக்கப்பட்டது. அந்நாள் முதல் அவர் பெரியார் என்றே அழைக்கப்படுகிறார். அவர் தம் கொள்கைகள் யாவும் பெரியாரியம் (Periyarism) எனப் போற்றப்படுகிறது. உலகாயதத்துடன் பெரியாரியம் ஒத்திருப்பினும், பற்பல சிறப்புக் கூறுகளைப் பெற்றிருப்பதால், புதிய உலகாயதம் என்ற பெயரால் பெரியாரியத்தினைச் சுட்டுதல் சாலும். இரண்டு நெறிகளையும் ஒப்பு நோக்கி ஆய்வதே ’உலகாயதமும் பெரியாரியமும்’ என்கிற இந்த ஆய்வுக் கட்டுரை.
பேரா. முனைவர். சோ.ந. கந்தசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று (1953-1962), எம்.ஏ., எம்.லிட், பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர்.
இதே பல்கலைக்கழகத்திலும், மலாயாப் பல்கலைக்கழகத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
இலக்கியம், இலக்கணம், மெய்யியல், வரலாறு, பண்பாடு, மொழிபெயர்ப்பு தொடர்பாக 75 நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
அய்ங்குறுநூறு, குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆராய்ச்சி உரைகளையும் வரைந்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது, தொல்காப்பியர் விருது, பாரிவேந்தர் பைந்தமிழ் விருது முதலிய பல மாண்புறு விருதுகளையும் பெற்றவர்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch