தமிழில்
Volume 05, Issue 03 | July 2025 - September 2025
பேரறிஞர் அண்ணா அவர்களின் பல்வேறு ஆளுமைப் பண்புகளை, அதன் விழுமியங்களை விளக்கிட இக்கட்டுரை முயற்சி செய்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை, இந்தியாவை எப்படி பார்த்தார் அண்ணா என்பதை எடுத்துக்காட்டுகிறது. அண்ணா முன்னெடுத்த போராட்டங்களையும், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியதையும் சுட்டுகிறது. அரசியல் தளத்தைப் போல கலாச்சாரத் தளத்தை அண்ணா எப்படி பயன்படுத்தினார் என்பதையும், அவர் ஏற்படுத்திய பண்பாட்டு மாற்றங்களையும், அரசு நிர்வாகத்தில் எப்படி பட்ட அணுகுமுறையை கொண்டிருந்தார் என்பதையும், அவரது ஆட்சி எப்படி இன்றுவரை தமிழ்நாட்டில் தொடர்கிறது என்பதையும் ஆய்வு நோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது.
ஆ. செல்லப்பாண்டியன்
ஆ. செல்லப்பாண்டியன் மதுரை மாவட்டம் திருவேடகத்தில் 1949 இல் பிறந்தவர். தொலைத்தொடர்புத் துறையில் 40 ஆண்டுகள் பணியாற்றி, 2008 இல் முதுநிலை மேற்பார்வையாளராக பணி நிறைவு பெற்றவர். தொழிற்சங்கத்தில் 50 ஆண்டுகள் கடந்த பொதுவாழ்க்கைப் பயணம் செய்தவர்; செய்து வருபவர். தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ள இவர், தொலைத்தொடர்புத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தில் 16 ஆண்டுகள் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றியவர். அகில இந்திய தொலைத்தொடர்பு தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தில் பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர். தற்போது தொ.தொ.மு. சங்கத்தின் அகில இந்திய தலைவராக உள்ளார். இந்தியாவில் 14க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடைபெற்ற அகில இந்திய மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கேற்றவர்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch