தமிழில்
Volume 04, Issue 03 | July 2024 - September 2024
Mu, Sangayya. 2024. “Manitha Arivai vellumaa Cheyarkkai Nunnarivu?”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 4 (3): 57-68.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மறுக்க முடியாத யதார்த்தமாக மாறியுள்ள இன்றைய உலகமயமாக்கல் சகாப்தத்தில், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் தாக்கத்திலிருந்து எந்த நாடும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது என்பதைத் தொழிலாளர் இயக்கங்கள் நன்கு அறிந்தே உள்ளன. கடந்த காலங்களில் வளர்ந்து வந்த உயர் தொழில் நுட்பங்கள், தொழிற்துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை ஒற்றுமையுடனும், தனது வலிமைமிக்க ஆற்றலுடனும், கூட்டுப்பேர சக்தியினாலும், தன்னையும் சமூக வாழ்வியலையும் தற்காத்துக் கொண்டு வளர்ந்ததைப் போன்றே செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷனையும் தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் என்கிற நம்பிக்கையை இக் கட்டுரை விதைக்கின்றது.
எழுத்தாளர். மு. சங்கையா
எழுத்தாளர் சங்கையா, இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் (BSNL) அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்திலும் (NFTE -BSNL), அனைத்திந்திய தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மனித உரிமை ஆர்வலர். இவரது முதல் படைப்பான “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற நூலுக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, 2013ஆம் ஆண்டின் சிறந்த பயண இலக்கிய நூலுக்கான விருதினை வழங்கியது. உலகமயம் இந்தியாவில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றிய “பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா”, சாதியைப் பற்றிய "சாதி என்னும் பெரும் தொற்று - தொடரும் விவாதங்கள்", இந்திய வலதுசாரிகளைப் பற்றிய “காவி என்பது நிறமல்ல” போன்ற இவரது நூல்கள் பெரிதும் பேசப்பட்டவையாகும். இவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில், துறையூர் என்ற சிற்றூர் (கிராமம்). வசிப்பது தமிழ் வளர்த்த மாமதுரையில்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch