English
தொகுதி 4, வெளியீடு 1 | ஜனவரி 2024 - மார்ச் 2024
Azhagu Selvam, A. 2024. "Katral Karpithalil Kalaigalin Pangu”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 4 (1): 49-64.
ஆழமும் நுட்பமுமாய் பரந்து, முத்தமிழ் என விரிந்து, அறிவியல் மற்றும் செவ்வியல் தன்மையுள்ள கலைகளின் வழியே, வகுப்பறைச் சூழலில் கற்றல், கற்பித்தல் செயல்பாட்டுடன் ஒரு முழுமையை உருவாக்க முடியும். கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளின் வழியாகப் சிறந்த கல்விமுறையை உருவாக்க முடியும் என்பதை இக்கட்டுரை முன்மொழிகிறது. ஒயிலாட்டம் என்னும் நிகழ்த்து கலை வடிவத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்படுகிறது. உடலையும் மனத்தையும் ஒருங்கிணைப்பதின் வழியாக இந்தக் கல்விமுறை அமைக்கப்படுவதை இக்கட்டுரை பேசுகிறது.
முனைவர். ஆ. அழகுசெல்வம்
அழகு அண்ணாவி எனும் முனைவர் அழகுசெல்வம், அருப்புக்கோட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். கூடல் கலைக்கூடத்தின் இயக்குநராகவும் விளங்கி வருகிறார். மூன்று கவிதை நூல்கள், ஆறு ஆய்வு நூல்கள், மற்றும் பல ஆயுவுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
ஒயிலாட்டம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் பயிற்றுநரான இவர், வீதி நாடகங்கள் பலவற்றை இயக்கித் தயாரித்துள்ளார். குறும்படங்கள், பயிலரங்குகள், வானொலி நிகழ்ச்சிகள் என்று பல்வேறு வடிவங்களில் கலைப்பணி ஆற்றியுள்ளார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் மற்றும் உமறுப் புலவர் கல்வி மையம் சார்பாகப் கற்றல் கற்பித்தல் பயிலரங்கினைச் சிங்கையில் நிகழ்த்தியுள்ளார். அமெரிக்கா சிகாகோ நகரில் நிகழ்வுற்ற 10ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். மக்களிசைப் பாடகர், அணிலாடு முன்றில், கலைவேந்தர் விருது முதலான விருதுகளை வென்றுள்ள இவர், 2021இல் மகாகவி பாரதி விருதும், அப்துல் கலாம் (சாதனையாளர்) விருதும் பெற்றுள்ளார்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க