English

View in English

கட்டுரை அளிக்க

ஆய்விதழில் கட்டுரை உள்ளிடும் நெறிமுறை

  • ஆய்வுக் கட்டுரைகள், திராவிடம் சார்ந்த கல்விப் பொருளில் அமைய வேண்டுவது திண்ணம். பகுத்தறிவு, பண்பாடு, நாகரிகம், கலை, வரலாறு, மொழி, மனிதம் ஆகிய துறைகளில், திராவிடம் சார்ந்த ஆய்வுப் பொருளில் அமையலாம்.
  • ஆய்வுக் கட்டுரைகள், அறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், பல்துறை வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் அமைதல் சிறப்பு.
  • அறிவியல் முறையிலான, தரவுகள் பொதிந்த, கல்விப்புலத் தரத்துடன், ஆய்வுக் கட்டுரைகள் அமைய வேண்டும்.
  • ஒவ்வொரு கட்டுரையும், கட்டுரைச் சுருக்கம், ஆதார நூற்கோவை (உயவுத்துணை / அடிக்குறிப்பு), ஆசிரியர் சிறுகுறிப்போடு வழங்கிடுதல் கட்டாயம்.
  • துறைசார் வல்லுநர் ஆய்வுக் குறிப்புகளோடு வெளிவரும் கட்டுரைகளுக்கு, முன்னுரிமை உண்டு.
  • தமிழ்/ ஆங்கிலம் - இருமொழிகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரையலாம்; பிற இந்திய/ உலக மொழிகளில் வரைந்தால், தமிழ்/ ஆங்கில மொழியாக்கம் உடன் வழங்கல் நலம்.
  • ஒவ்வொரு கட்டுரையும், 20-30 பக்கங்கள் வரை இருப்பின் நன்று. வரைபடம்/தரவுப்படம் உள்ள கட்டுரையெனில், மேற்சொன்ன பக்க வரையறை சற்றே தளர்த்திக் கொள்ளலாம்.
  • ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்புகள், ஒவ்வாமையின்றி, அனைவரையும் படிக்கத் தூண்டும் தலைப்புகளாக அமைதல் நலம்.
  • கட்டுரையினை MS-Word, OpenOffice, Google Doc அல்லது RTF கோப்பாக உள்ளிடலாம். ஒருங்குறி எழுத்துரு பயன்படுத்துக. (பரிந்துரை: Arial Unicode MS).
  • கட்டுரைகளைக் கூடுமானவரை பகுதி பகுதிகளாக வெளியிடாது, ஒரே கட்டுரையாக வழங்குதல் நலம்.
  • கட்டுரைகளை, முன்பே வேறெந்த வடிவத்திலோ, தளத்திலோ வெளியிட்டோ பயன்படுத்தியோ இருத்தல் கூடாது.
  • கட்டுரையில், உரிமம் சார்ந்த பொருட்கள் இருப்பின், அவற்றுக்கான முறையான இசைவைப் பெற்றிருத்தல் வேண்டும். இதன் முழுப் பொறுப்பும் கட்டுரையாசிரியரையே சாரும். ஆதாய முரண் (Conflict of Interest) மற்றும் பொறுப்புத் துறப்பு ஆகியவை ஏதேனும் இருப்பின், அவற்றைக் கட்டுரையில் தனியாகக் குறிக்க வேண்டும்.
  • ஆய்வுக் கட்டுரைகளை dravidapozhil@pmu.edu. என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கலாம். அனுப்பி வைக்கும் கட்டுரைகளுக்கு ஏற்புக்குறிப்பு அனுப்பி வைக்கப்படும்.
  • காலாண்டு இதழ் (சனவரி, ஏப்ரல், யூலை, ஒக்டோபர்) என்பதால், ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு மாதம் முன்னதாகவே கட்டுரைகளை அனுப்பினால் தான், சீராய்வு செய்து வெளியிட உதவியாக இருக்கும்.
  • ஆய்வுக் கட்டுரைகளை, உலக ஆய்விதழ்த் திரட்டிகளில் இணைக்க, திராவிடப் பொழிலுக்கு முழு உரிமை உண்டு.
  • கட்டுரை வெளியீட்டில், ஆய்விதழ் ஆசிரியர் குழுவின் முடிவே அறுதியும் உறுதியும் ஆகும்.

கட்டுரை அளிக்க