முனைவர். ச. ஜீவானந்தம்
முனைவர் ஜீவானந்தம், புது டில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சமூக அறிவியல் புலம் - பெண்ணிய ஆய்வு மையத்தில், உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்.
இதற்கு முன்பு, சிக்கிம் ஒன்றியப் பல்கலைக்கழகத்திலும், அஸ்ஸாம் ஒன்றியப் பல்கலைக்கழகத்திலும், வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் வாய்ந்தவர் ஆவார். உள்நாடு மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கு கொண்டுள்ளதுடன், அக் கருத்தரங்குகளில் அளித்த ஆய்வுக் கட்டுரைகளுக்குச் சிறப்பு விருதுகளைப் பெற்றவர் ஆவார். அத்துடன், கல்வியில் சிறந்து விளங்கியதற்காக நீதியரசர் இராசகோபாலன் நினைவுப் பதக்கமும், பல்கலைக்கழக வேந்தர் அவர்களின் நூற்றாண்டுப் பரிசும், அனந்தராம சர்மா நினைவுப் பரிசும் பெற்றவர் ஆவார்.
மேலும், தமிழகம், பெண்ணியம், பெரியாரியம், சமயம், தேவதாசி முறை குறித்து வரலாற்று முறையிலான ஆய்வினை மேற்கொண்டு வருவதுடன், அவற்றினைத் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்கள் மற்றும் பதிப்பகங்களின் மூலம் கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் தொடந்து எழுதியும், பதிப்பித்தும் வருகின்றார்.