பேரா. முனைவர். சோ.ந. கந்தசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று (1953-1962), எம்.ஏ., எம்.லிட், பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர்.
இதே பல்கலைக்கழகத்திலும், மலாயாப் பல்கலைக்கழகத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
இலக்கியம், இலக்கணம், மெய்யியல், வரலாறு, பண்பாடு, மொழிபெயர்ப்பு தொடர்பாக 75 நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
அய்ங்குறுநூறு, குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆராய்ச்சி உரைகளையும் வரைந்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது, தொல்காப்பியர் விருது, பாரிவேந்தர் பைந்தமிழ் விருது முதலிய பல மாண்புறு விருதுகளையும் பெற்றவர்.