English
தொகுதி 4, வெளியீடு 2 | ஏப்ரல் 2024 - ஜூன் 2024
Gnana Valluvan. 2024. “Varnasramame Sanatanam”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 4 (2): 69-89.
ஆரிய மதத்தின் முகமான ஸநாதன தர்மம் என்றால் இது தான் என்று அறுதியிட்டதொரு தெளிவான விளக்கம், அதை ஆதரிப்போர்களாலும் இதுவரை முழுமையாகக் கூறப்படவே இல்லை.
இந்நிலையில், இன்றைக்கு ஆளுக்கு ஆள் ஒவ்வொரு விதமாக விளக்கமளிக்கும் ஸநாதனம் குறித்துக் காலங்காலமாக என்ன கூறியுள்ளனர்? ஸநாதனம் குறித்து ஆதாரபூர்வமாகக் கிடைக்கும் தகவல்கள் என்ன? என்பன பற்றி அறியும் போது தான் தெளிவு கிட்டும்.
இந்த வகையில், இன்றைக்கு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் ’ஸநாதனம்’ குறித்து, ஆதாரங்களின் அடிப்படையில், அஃது கடுமையான வர்ண பேதத்தை வலியுறுத்துவதேயன்றி வேறில்லை என்பதைப் பல்வேறு தரவுகளுடன் தொகுத்து அளிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
எழுத்தாளர் ஞான. வள்ளுவன்
ஞான. வள்ளுவன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, எம்.ஏ மற்றும் மருத்துவமனை மேலாண்மையில் முதுகலை பட்டயப் படிப்பினைப் பயின்றவர். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் நிருவாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத்தலைவராக உள்ளார்.
இவரின் நூல்களாவன: 1. பெரியார்-95, 2. தமிழர் வாழ்வில் சாதியும் மதமும் அன்றும் இன்றும், 3. திராவிட இயக்கமும் எங்கள் ஊரும், 4. இசைவேளாளர், 5. ராஜநாயகம் (வரலாற்றுப் புதினம்), 6. ஆச்சாரம் (சமூகப் புதினம்), 7. வரலாற்றில் வென்ற அவர் தாம் பெரியார், 8. செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும், 9. தளிச்சேரிப் பெண்டுகள், 10. சில பக்கங்கள் சில தாக்கங்கள்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க