English
தொகுதி 3, வெளியீடு 1 | சனவரி 2023 - மார்ச் 2023
மதுரை
Mu, Sangayya. 2023. “ஆலயம் - ஆகமம் - ஆரியம் அறிந்ததும் அறியாததும்”. Dravida Pozhil - Journal of Dravidian Studies 3 (1):67-83.
ஆகமம் என்றால் என்ன,ஆகமம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.கோயில்கள் எப்படித்தோன்றின,சிறுதெய்வ வழிபாடு பெருந்தெய்வ வழிபாடு பற்றி விவரிக்கும் இந்தக் கட்டுரை ஆகமம் வேறு ,வேதம் வேறு என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளை எடுத்துக்கொண்டு நிறுவும் இக்கட்டுரை ஆலயங்கள் எப்படி ஆரியமயமாகியது என்னும் வரலாற்றை எடுத்துக்காட்டுகிறது.
எழுத்தாளர் மு. சங்கையா, மதுரை
சங்கையா, இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் (BSNL) அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்திலும் (NFTE -BSNL), அனைத்திந்திய தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மனித உரிமை ஆர்வலர். இவரது முதல் படைப்பான “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற நூலுக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, 2013ஆம் ஆண்டின் சிறந்த பயண இலக்கிய நூலுக்கான விருதினை வழங்கியது. உலகமயம் இந்தியாவில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றிய “பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா”, இந்திய வலதுசாரிகளைப் பற்றிய “காவி என்பது நிறமல்ல” போன்ற இவரது நூல்கள் பெரிதும் பேசப்பட்டவையாகும். இவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில், துறையூர் என்ற சிற்றூர் (கிராமம்). வசிப்பது தமிழ் வளர்த்த மாமதுரையில்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க