English
தொகுதி 5, வெளியீடு 2 | ஏப்ரல் 2025 - ஜூன் 2025
பேராசிரியர் பி. இரா. வீரமணி
ஆங்கிலத்துறை பேராசிரியரான முனைவர் பி. இரா. வீரமணி அவர்கள், ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தை மையமாகக் கொண்டு 32 சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளையும் 9 புத்தகங்களையும் ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வுகள் பின்காலனித்துவ ஆய்வுகள், சுற்றுச்சூழல், மனிதநேயம் மற்றும் கருத்தியல் விமர்சனம் ஆகியவற்றை உள்ளடக்கியவை. அவர் 10 முனைவர் பட்ட ஆய்வாளர்களை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். மேலும் 10 முனைவர் பட்ட ஆய்வாளர்களை தற்போது வழிநடத்திக் கொண்டுள்ளார். இவர் தஞ்சை அருகிலுள்ள பூண்டியில் அமைந்த திரு. புட்பம் கல்லூரியில் ஆங்கில இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது வழிகாட்டுதலின் கீழ் ஆய்வு மாணவர்கள் தங்களது ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
முனைவர் பட்ட ஆய்வாளர் ச. உஷா
முனைவர் பட்ட ஆய்வாளர் ச. உஷா அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். தமது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பயின்றார். பின்னர் திருச்சி அரசு கலைக் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய அவர், தற்போது பேராசிரியர் பி. இரா. வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அவரது முனைவர் பட்ட ஆய்வு பிரிட்டிஷ் பெண்ணிய எழுத்தாளர் சாரா மாஸ் அவர்களின் நாவல்களை மையமாகக் கொண்டு, அவற்றில் வெளிப்படும் உளவியல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சமூகப் பிரச்சினைகளை ஆய்வு செய்கிறது. அவரின் கவித்திறமைக்காக கவிதைகளம் கவிப்பாவை குழுமத்தின் சார்பில் தங்கத் தாரகை விருது வழங்கப்பட்டுள்ளது. தஞ்சையில் ஏடகம் மகளிர் மன்றம் சார்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பங்கேற்றுள்ளார். மேலும், சுமார் 30 ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் தொடர்பான ஆசிரியர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டுள்ளார்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க