English
தொகுதி 5, வெளியீடு 1 | ஜனவரி 2025 - மார்ச் 2025
இந்தியாவில் மெக்காலேயின் கல்வித்திட்டம் பற்றி இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழிப்பதற்காகவே மெக்காலே என்னும் ஆங்கிலேயரின் கல்வித்திட்டம் செயல்பட்டது என்று ஒருபாலர் கூறும் நிலையில், மெக்காலேயின் கல்வித்திட்டம் பற்றி இந்தக் கட்டுரை ஆராய்கிறது. இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்து விட்டது என்று சொல்லும் வைதீகக் கூட்டு கருத்தின் உண்மையா என்பது இக்கட்டுரை சரி தூக்கிப் பார்க்கிறது. சீரழிந்து போயிருந் இந்தியக் கலாச்சாரத்தைச் சீர்படுத்த மெக்காலேயின் கல்வி உதவியதா என்பதையும் இந்தக் கட்டுரை நோக்குகிறது. தொழிற்புரட்சி தொடங்கி உலகம் முழுவதும் மாறிய போதிலும் இந்தியா மட்டும் மாறாமல் எப்படித் இருந்தது, ஏன் இருந்தது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. நவீனக் கல்வி முறையை உறுதிப்படுத்துவதிலும், இந்திய வரலாற்றில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் நுழையும் அறிவாலயமாகப் பள்ளிகளை மாற்றியதிலும், மெக்காலேயின் கல்வித்திட்டத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்பதையும் இக்கட்டுரை ஆதாரங்களோடு மெய்ப்பிக்கிறது.
எழுத்தாளர் மு.சங்கையா
எழுத்தாளர் சங்கையா, இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் (BSNL) அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்திலும் (NFTE-BSNL), அனைத்திந்திய தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மனித உரிமை ஆர்வலர். இவரது முதல் படைப்பான “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற நூலுக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, 2013 ஆம் ஆண்டின் சிறந்த பயண இலக்கிய நூலுக்கான விருதினை வழங்கியது. உலகமயம் இந்தியாவில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றிய “பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா”, ஜாதியைப் பற்றிய “சாதி என்னும் பெரும் தொற்று - தொடரும் விவாதங்கள்”, இந்திய வலதுசாரிகளைப் பற்றிய “காவி என்பது நிறமல்ல” போன்ற இவரது நூல்கள் பெரிதும் பேசப்பட்டவையாகும். இவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில், துறையூர் என்ற சிற்றூர் (கிராமம்). தற்போது வசிப்பது தமிழ் வளர்த்த மாமதுரையில்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க