English
Volume 05, Issue 03 | July 2025 - September 2025
இலக்கிய வாசிப்பு/திறனாய்வு நெறிமுறையானது நூலின் ஒருமைக் கட்டமைப்பு (unity of structure) கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. திருக்குறள் வகையில் அதன் ஒருமைக் கட்டமைப்பின் ஊடிழைகளாக அமைவன நூலின் அறிவியல் அணுகுமுறையும் மனிதக் கோட்பாடும் (humanism) உட்பொதிவாக அமைந்துள்ள வேத மத மறுதலிப்பும் ஆகும். இம்மூன்றின் ஊடேயான வாசிப்பில் வெளிப்படுவது தொல்காப்பியர், தொல்தமிழ் அகப் புறச் சான்றோர் வழியில் திருவள்ளுவர் வேத இறை மறுப்பாளர் என்பதே. பெரியாரியப் பகுத்தறிவு, சமூகநீதி, சுயமரியாதை, ஜாதி ஒழிப்பு முதலியன திருக்குறள் வாசிப்புவழி விளக்கம் பெறுகின்றன என்பதும், திருக்குறள் வாசிப்புக்கு பெரியாரியப் புரிதல் துணை புரிகிறது என்பதுமே இக்கட்டுரையின் பொருண்மையாகும்.
பேரா. வெ.முருகன்
முன்னாள் ஆங்கிலப் பேராசிரியரான இவர், பயன்முறை மொழியியலில் முதுமுனைவர் பட்டமும், ஒப்பிலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். ஆக்ஸ்போர்டு தமிழ்–தமிழ்–ஆங்கிலம், ஆங்கிலம்–ஆங்கிலம்–தமிழ் அகராதிகளின் ஆசிரியர். Tolkāppiyam in English, Naṟṟiṇai in English, Kalittokai in English, Paripāṭal in English, Tirukkuṟaḷ in English, Applied Linguistic Readings of Tolkāppiyam முதலான நூல்களின் ஆசிரியர். இவரது Tolkāppiyam: The Linguistics Threshold (தொல்காப்பியம்: மொழியியலின் தலைவாயில்) என்னும் நூல் அச்சில் உள்ளது.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க