English
தொகுதி 2, வெளியீடு 2 | ஏப்ரல் 2022 - சூன் 2022
M, Sangaiya. 2022. "Buddham: Ezhuchiyum Veezhchiyum”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 2 (2):53-66.
புத்தரின் புதிய நெறி, பார்ப்பனீயக் கொடுமைகளிலிருந்து விடிவு தருவதாகவே பிறந்து, அன்று புத்தொளி வீசிப் பறந்தது. வெறும் தத்துவத் தொகுப்பாக மட்டுமல்லாது மானுடத் தொகுப்பாகவும் விளங்கியது. பிறப்பால் விதிக்கப்படும் உயர்வு தாழ்வுகளைப் பவுத்தம் என்றுமே ஏற்கவில்லை. மெளரியப் பேரரசர் அசோகரின் ஆட்சியில், அரசியலிலும் சமூகத்திலும் செல்வாக்கு பெற்றது பவுத்தம். இதனால் பார்ப்பனீயம் செல்வாக்கை இழந்தாலும், முற்றிலுமாக அழியவில்லை.
பவுத்தத்தின் வீழ்ச்சி, புத்தரின் மறைவிலிருந்தே சிறுகச் சிறுகத் தொடங்கி விட்டது. பல உட்பிரிவுகளாகப் பிரிந்து, மனிதரான புத்தரைக் கடவுள் நிலைக்கு உயர்த்திய போது, வீழ்ச்சி இன்னும் வலுப்பெற்றது. மானுடம் என்பதை விலக்கி, வெறும் தத்துவச் சிறைக்குள் தள்ளப்பட்டு, மக்களின் பாளி மொழியிலிருந்து விலகிச் சமஸ்கிருத மொழிக்கு மாறிய போது, பவுத்தத்தின் வீழ்ச்சி கண்ணெதிரே தெரியத் துவங்கிற்று. பார்ப்பனீய ஆதரவாளர்களான குப்தர்களும், பவுத்தத்தை உருவ வழிபாடாகக் கருதிய இசுலாமிய அரசர்களும், அதன் வீழ்ச்சியை விரைவுபடுத்தினர். அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தாலும், மூட நம்பிக்கைகளிலும் சாதிக் கிளைகளிலும் சிக்கி, பல நூறு பிரிவுகளாகப் பிரிந்து, புத்தர் வகுத்த நெறிகளுக்கு நேரெதிர் திசையில் பயணிக்கத் துவங்கி விட்டது பவுத்தம். அது இனியும் புத்தாக்கம் பெறுமா? என்றும் ஆய்கிறது இக் கட்டுரை.
மு.சங்கையா
மு. சங்கையா, இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் (BSNL) அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்திலும் (NFTE -BSNL), அனைத்திந்திய தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மனித உரிமை ஆர்வலர்.
இவரது முதல் படைப்பான “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற நூலுக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, 2013ஆம் ஆண்டின் சிறந்த பயண இலக்கிய நூலுக்கான விருதினை வழங்கியது. உலகமயம் இந்தியாவில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றிய “பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா”, இந்திய வலதுசாரிகளைப் பற்றிய “காவி என்பது நிறமல்ல” போன்ற இவரது நூல்கள் பெரிதும் பேசப்பட்டவையாகும். இவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில், துறையூர் என்ற சிற்றூர் (கிராமம்). வசிப்பது தமிழ் வளர்த்த மாமதுரையில்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க