English
தொகுதி 2, வெளியீடு 1 | சனவரி 2022 - மார்ச் 2022
சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை
MS, Kanmani. 2022. "Periyariyal Nokkil Natrinai”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 2 (1):67-81.
நற்றிணைப் பாடல்கள் எழுதப்பட்ட காலச் சூழலும், மக்கள் வாழ்நிலையும் காலத்தால் முந்தியது. மிகவும் பழமையானது. அவ்வாறிருக்க, தற்காலத்தில் எழுந்துள்ள மக்கள் எழுச்சிச் சிந்தனைகளான -இசங்கள் 19,20ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. இருப்பினும் எல்லா -இசங்களும் தோன்றுவதற்கு முன்பே, ‘புத்தர்’ மனிதநேயக் கொள்கைகளை அனைத்து மக்களுக்காக உருவாக்கி, மக்களிடையே சென்றடையச் செய்தார். அது புத்திசமாக உருவானது. எல்லா வகை -இசங்களும் சொல்லும் செய்தி ஒன்று தான் - எல்லா மக்களும் சமம்; எந்த நிலையிலும் உயர்வு தாழ்வு இல்லை என்பதே. மார்க்சியம் என்பது பொருளாதாரச் சமத்துவக் கொள்கை. பெண்ணியம் என்பது பாலினப் பேதமற்ற சமத்துவம். பெரியாரிசம் என்பது பிறவிப் பேதமற்ற - சமத்துவமும், சுயமரியாதையும் கலந்த மனிதநேயக் கொள்கை ஆகையால், பெரியாரிசத்தை அடிப்படையாகக் கொண்டு நற்றிணையை ஒப்பிட்டு ஆய்வது இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
காலத்தால் பழைமை வாய்ந்த பண்டைத் தமிழரின் வாழ்வில், தற்கால -இசங்களுடன் எவ்வாறு ஒத்துப் போகும்? அதனை ஒப்பிடுவது சரிதானா? என்ற கேள்வி எழுவது இயற்கை. சங்க இலக்கியங்கள் சொல்வது மக்களின் அற்றைக் கால வாழ்வியல். -இசங்கள் சொல்வது மனிதனின் தனிமனிதச் சுதந்திரமும் உரிமையும் ஆகும். ஆகவே, அன்றைய கால வாழ்க்கையில் இத்தகைய சமமான தன்மையுடன் வாழ்க்கையை மனிதர்கள் வாழ்ந்தார்களா? என்பதே ஆய்வின் அடிப்படைப் பொருண்மைகளாகும்.
முனைவர். கண்மணி, தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி, தமிழ்த்துறையில், உதவிப் பேராசிரியராக உள்ளார். பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள், தேசியக் கருத்தரங்கக் கட்டுரைகள், என்று பல கருத்தரங்களிலும் அறக்கட்டளைகளிலும் உரைநிகழ்த்தி வருகிறார். அறிவொளி இயக்கத்தில் குரவர்களுக்கான சிறப்பு வகுப்பு எடுத்துள்ளார். திலவகதி அய். பி.எஸ் அவர்களை நெறியாளராகக் கொண்டு விளங்கிய பாலின பகிர்நிலைப் பயிலரங்கதில் பயிற்றுநராகப் பணியாற்றியுள்ளார். சிறப்பான பயிற்றுநர் என்று மேனாள் கல்வி அமைச்சர், பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் கரங்களால் பரிசும் பெற்றுள்ளார்.
இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்: விழித்தெழுந்த விதைகள்’ (கவிதை நூல்), ‘சமூகத்தின் ஆணிவேர்’ (ஆய்வு நூல்); ’பெண்ணியக்குரல்’ என்ற சிற்றிதழும் நடத்தியுள்ளார். விடுதலை, உண்மை, பெண்ணியம், புதியகுரல், நாளை விடியும், பெண்ணியக்குரல் போன்ற இதழ்களில், இவரது கட்டுரைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன. உவமைக் கவிஞர் சுரதா, கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் கவியரங்களிலும் பங்கேற்றுள்ளார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பள்ளி மாணவர்களுடன் உரையாற்றியுள்ளார். இவரைப் பாராட்டிக் கொழும்பு தமிழ் சங்கம் ’தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கியுள்ளது. காரைக்குடி கல்விச் சேவை அமைப்பு 'மனித நேய'விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க