English
தொகுதி 3, வெளியீடு 1 | சனவரி 2023 - மார்ச் 2023
மதுரை
Santhalingam, So. 2023. “Thamizhey Dravidam”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 3 (1): 57-65.
அண்மைக் காலத்தில் தான் தமிழ் வேறு, திராவிடம் வேறு என்று பிழையான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கல்விப் புலத்தில், ’தமிழ்’ என்ற சொல்லும், ’திராவிடம்’ என்ற சொல்லும் ஒருபொருள் பன்மொழிகளே. தமிழ் என்ற சொல் இயற்சொல் (Endonym). திராவிடம் என்ற சொல் திசைச்சொல் (Exonym). இவ்விரண்டும், தமிழ் வரலாற்றில் மட்டுமல்லாமல், உலக வரலாற்றிலும் நீண்டு நெடுக இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழி மட்டுமல்லாது, பல உலக மொழிகளிலும் இத் தன்மை குடிகொண்டுள்ளது. தமிழ்/திராவிடம் - இரண்டு சொற்களும் ஒரே பொருளை – தமிழ் மொழியைக் குறிப்பனவே என்ற இன வரைவியல்-மொழியியல் உண்மையைப் பல தரவுகள் கொண்டு இக் கட்டுரை நிறுவுகிறது.
முனைவர். சொ. சாந்தலிங்கம், மதுரை.
முனைவர் சொ சாந்தலிங்கம், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் நீராவி என்னும் சிற்றூரில் பிறந்தவர். தமிழ்நாட்டரசின் தொல்லியல் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிப் பணிநிறைவு பெற்றவர். தற்போது மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராக இயங்கி வருகிறார்.
பல வரலாற்று நூல்களின் ஆசிரியர். 2014ஆம் ஆண்டில், சிறந்த தொல்லியல் அறிஞர்க்கான இராசராச சோழன் விருதினைப் பெற்றவர்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க