English
Volume 05, Issue 01 | January 2025 - March 2025
‘கதை’ என்ற சொல் ஒளித்து வைத்திருக்கும் வரலாறுகள் எண்ணிலடங்காதவை. வரலாறு என்ற வார்த்தையின் அர்த்தமே பல மனிதர்களின் வாழ்க்கையை காட்டுகிறது. அவ்வாறாக வரலாறு ஆக்பட்ட கதைகள் ஏராளம். அவற்றுள் “மௌனமாகப் பட்கப்பட்ட கதைகள் மானுட வரலாறு ஆனது” எவ்வாறு என்பது இந்த ஆய்வு கட்டுரையின் வாயிலாக காண்போம். இந்த ஆய்வு கட்டுரையில் குறிப்பாக ‘வாழ்க்கையே வரலாறு’ ஆன சில எழுத்தாளர்்களின் பங்களிப்பைப் பார்க்கலாம்.
பேராசிரியர் பி. இரா. வீரமணி
ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் பி.இரா.வீரமணி அவர்கள் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தை மையமாகக் கொண்டு 32 சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளையும், 9 புத்தகங்களையும் ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வுகள் பின் காலனித்துவ ஆய்வுகள், சுற்றுச்சூழல், மனிதநேயம் மற்றும் கருத்தியல் விமர்சனம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவர் 10 முனைவர் பட்ட ஆய்வாளர்களை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். மேலும் 10 முனைவர் பட்ட ஆய்வாளர்களை வழிநடத்திக் கொண்டுள்ளார். இவர் தஞ்சை அருகில் பூண்டியில் உள்ள திரு புட்பம் கல்லூரியில் ஆங்கில இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மொழிகள் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது வழிகாட்டுதலின் கீழ் ஆய்வு மாணவர்கள் ஆய்வைத் தொடர்கின்றனர்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க