English
தொகுதி 3, வெளியீடு 4 | அக்டோபர் 2023 - டிசம்பர் 2023
Kasthuri Bai, Mu. 2023. "Periyarin Ariviyal Tholainokku”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 3 (4): 81-88.
எதிர்காலத்தில் அறிவியல் முன்னேற்றம் எப்படி இருக்கும், அறிவியல் வளர்ச்சி மனிதகுலத்தை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என்பதையெல்லாம் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் விளக்கிச் சொல்லி வந்தார். அவருடைய சிந்தனைகளைத் தொகுத்து அறிஞர் அண்ணா தமது ‘திராவிட நாடு’ இதழில் வெளியிட்டார். பின்னர் அவற்றை ‘இனிவரும் உலகம்’ என்னும் தலைப்பில் தந்தை பெரியார் தனிநூலாக வெளியிட்டார். கர்ப்பத் தடை, சோதனைக் குழாய்க் குழந்தை, வானொலிப் பெட்டி, அலைபேசி, காணொளி, மின்சாரத்தின் பயன்பாடு, புதுப்புது வாகனங்கள், வானவூர்திகள், துப்புரவு எந்திரங்கள், வானியல் ஆராய்ச்சிகள், பொருட்களின் இயக்கம் குறித்துப் பெரியார் பேசியவை இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த மதக் கோட்பாடுகள் தகர்ந்துள்ளன. அதே சமயம், மதவாதிகள் விடாப்பிடியாக மூடநம்பிக்கைகளைப் பரப்பி வருகின்றார்கள். அதற்குத் தீர்வும் முடிவும் கூறியுள்ளார் பெரியார். பழைமையை வைத்துக் கொண்டு இலாபம் பார்க்கும் கூட்டம் அறிவியல் பார்வைக்குத் தடை போடுவர்; அவர்களை இனங்கண்டு ஒதுக்கிவிட்டுத் துணிச்சலாக முன்னேறுகின்றவர்களே இனிவரும் உலகத்தின் சிற்பிகளாவர் என்று ஊக்கம் ஊட்டுவதை இக்கட்டுரை ஆய்கின்றது.
பேரா. மு. கசுத்தூரிபாய்
பேரா. மு. கசுத்தூரிபாய், மதுரை யாதவர் கல்லூரியல் பயிரியல் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவுச் சிந்தனைச் சான்றிதழும் (Certificate in Rationalistic Thought), பட்டயமும் (Diploma) பெற்றவர். யாதவர் கல்லூரியில் பகுத்தறிவுச் சிந்தனை வகுப்புகளை நடத்தியவர்.
இவரும் பேரா. இ.கி. இராமசாமியும் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட இணையராவர். திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பகுத்தறிவாளர் கழக மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும், வானொலியிலும் உரைவீச்சு நிகழ்த்தியவர். பெண்ணுரிமைச் சிந்தனையாளர்; அறிவியற் பார்வையோடு எந்தக் கருத்தையும் அணுகுபவர்; வாசகர்; திறனாய்வாளர்; கட்டுரையாளர். அண்மையில் (மே. 2023) அறிவியற் பார்வையில் சங்க இலக்கியச் செய்திகள் என்ற நூலை இயற்றி வெளியிட்டுள்ளார்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க