English

View in English

உலகெங்கும் உள்ள திராவிடத் தமிழார்வலர்களுக்கும், அறிவுச் சான்றோர்கட்கும் முதல் வணக்கம்!

திராவிடப் பொழில் என்பது, காலாண்டு தோறும், திராவிடச் சமூகவியல் சார்ந்த செறிவான ஆய்வுக் கட்டுரைகளைப் இருமொழிகளில் ஏந்தி வெளிவரும் ஓர் ஆய்விதழ் (Research Journal).

”பொழில் வதி வேனில், பேர் எழில் வாழ்க்கை” என்பது சங்கத்தமிழ். பொழில் என்ற சொல்லுக்கு, வெறும் சோலை, பூங்கா என்று மட்டுமே பொருள் அல்ல; பொழிந்து உள்ள சோலையே, பொழில்! நீர் பொழிந்து, நீர் இடையறாது, தன்னகத்தே ததும்பும் சோலையே பொழில். போலவே, திராவிடம் பொழிந்து, திராவிடம் இடையறாது ததும்பும் சோலையே, ’திராவிடப் பொழில்’.

இது ஒரு கல்விப் பயணம்; மக்களை நோக்கிய கல்விப் பயணம்; மக்களையும் அறிஞர்களையும் ஒருங்கிணைக்கும் கல்விப் பயணம்; கல்விக் கதவுகளை அனைத்து மக்களுக்கும் திறந்துவிட்ட திராவிட இயக்கச் சமுகநீதியின், கல்விப் பயணம்.

அறிஞர்களிடமிருந்து வாழ்த்துக்கள்

We use cookies to offer you a better site experience. By continuing to browse this site you’re agreeing to our use of cookies.